முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கல் வீசி தாக்குதல் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கல் வீசி தாக்குதல்

முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கல் வீசி தாக்குதல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வேலூர் தொகுதி எம்.பி முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் வீடு காவிக்கும்பளால் கல் வீசி தாக்குதல்!
TNTJ கண்டனம்!


முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி வேண்டி TNTJ புகார் மனு:

முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்  தலைமையில் பல மாதம்களாக அமைதி பேச்சுவார்த்தைகள் மாதம் தோறும் நடைபெற்றது. குறிப்பாக இந்தவருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்மந்தமாகவும் திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையிலும்  அதேபோல்   முத்துப்பேட்டையிலும் நடைபெற்றது.  அதில் முத்துப்பேட்டை  அனைத்து ஜமாத்தினரும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிர்வாகிகளும்,  எதிர் தரப்பில்  இந்து முன்னணி,  B.J.P யினரும்  கலந்துக்கொண்டனர். அந்த  பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்தவருடங்களைவிட அதிநவீன வசதிகளைக்கொண்ட  கேமராக்களை  பொருத்தி கண்காணித்தும், 3000 க்கும் மேலான காவலர்களைக்கொண்டு 5 அடுக்குப்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்றும், மேலும் முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி ஏற்படவேண்டும் என்ற நோக்கில் இருதரப்பினருக்கும்  கூடுதலான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.


அதனடிப்படையில் முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி ஏற்படவேண்டும் என்ற நோக்கில்  18.09.2010 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்  போது   முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.


ஆனால் ஊர்வலம் நடத்தும் இந்து முன்னணி அமைப்பினர்   கட்டுப்பாடுகளை மீறும் விதமாகவும், முத்துப்பேட்டையின்  அமைதியை  சீர்குலைக்கும்  விதமாகவும் நடந்துக்கொண்டனர் .


17.09.2010 அன்று தொடங்கிய வாகன அறிவிப்பில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாசகங்களை பயன்படுத்தினர். (உடனே TNTJ நகர நிர்வாகிகள் காவல்துறையிடம் முறையிட்டதும் அந்த வாசகங்கள் மாற்றப்பட்டன)
அதைதொடர்ந்து 18.09.2010 அன்று ஊர்வலத்தை கண்டிப்பாக மதியம்  2.௦௦ மணிக்கு துவங்கி மாலை 4.௦௦ மணிக்குள் பழைய பேருந்து நிலையம் வந்தாகவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மீறி 3.30 மணிக்கு மேல் ஊர்வலத்தை துவக்கி மலை 5.30 மணிக்கு வந்தடைந்தனர். ஊர்வலத்தில் வெடிக்கப்படும் வெடிகள் சாதாரண வெடிகளாகவும், தயாரிக்கப்படும் டெசிபல் அளவை மாற்றாமலும் வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும்  மீறி அதிக டெசிபல் அளவைக்கொண்டு உயர்தரமான வெடிகளை வெடித்தனர். ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் மிக அதிக அளவில் கொந்தளித்ததுடன் "பத்துகாசு முருக்கு பள்ளிவசால் நொறுக்கு", "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" "முத்துப்பேட்டை கருப்பு கோட்டை' " துளுக்கனே வெளியேறு" என்று மத துவேசத்தோட  கோசமிட்டதிலும் ஊர்வலத்தின் போது  வேலூர்  தொகுதி  எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்தியும் அவர்கள் அளித்த வாக்குறுதியை மீறும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலை மீறியும், முத்துப்பேட்டையின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் நடந்துக்கொண்ட இந்துமுன்னணி அமைப்பினர் மீது எடுத்து முத்துப்பேட்டையில்  ஏற்படும் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் முத்துப்பேட்டையில் நிரந்தர அமைதி ஏற்படுத்தி தருமாறும் காவல்துறையிடம் வலிறுத்தி புகார் மனு TNTJ நகர நிர்வாகிகள் அளித்தனர்.

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template