
. இந்த முகாம் வருகிற 06 .11 .2011 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அதில் ஞாயிற்று கிழமையும் பணிகள் இருக்கும் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே வெளி நாடுகளில் இருக்ககூடிய நமதூர் நண்பர்கள் அனைவரும் தாங்கள் பெற்றோர்,மனைவி,குழந்தைகள் ஆகியவர்களுக்கு வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்க உடனே தாங்கள் வீட்டுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும் ஒவ்வொரு சட்ட மன்ற வாக்கு சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இதில் 8 ,9 ,13 ,15 ஆகிய வார்டுகளுக்கு ஆ,நே.பள்ளிகூடத்தில் நடைபெறுகிறது. மேலும் பேட்டை பள்ளிக்கூடம், புது தெரு பள்ளிக்கூடம், மருதன்காவெளி பள்ளிக்கூடம், கோவிலூர் பள்ளிக்கூடம், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் மீதம் உள்ள வார்டுகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் 30 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்க்கண்ட நகல்களை இணைத்து கொடுக்கவும்:
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்பதற்கு தேவையான ஆவணங்கள்:
1 ) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2
2 ) ரேசன் கார்டு காப்பி 1
3 ) TC சர்டிபிகட் (Transfer Certificate )
4 ) பிறந்த சான்றிதல் (Birth Certificate ) அல்லது
5) பாஸ்போர்ட் காபி (Passport Copy) அல்லது
6 ) டிரைவிங் லைசன்ஸ் காபி (Driving Licence )
நன்றி -முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்