மனித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.கட்சி! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » மனித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.கட்சி!

மனித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.கட்சி!


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டடத்தின் மாடியில்

 எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்தபோது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டடப் பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள் ஆகியோரின்
கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில்
அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம், பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாகக் குழுமினர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டடப் பொறியாளர் குமார், பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டட மேற்பார்வையாளர் அருள் ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20,00,000 (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டடப் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும் பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது. ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர். தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம். உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுங்கள் என்று தமுமுகவினரை விரட்டி, காரித்துப்பும் அளவிற்கு த.மு.மு.க. மற்றும் ம.ம.க. மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.6,00,000 (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள்தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழ் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு த.மு.மு.க, ம.ம.கவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது. மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template