திருவாரூர்
மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ரயில்வே முன்பதிவு மையத்தை
மீண்டும் முத்துப்பேட்டைக்கு கொண்டுவர பல கட்ட முயற்சிகளை
மேற்கொள்ளப்பட்டது தேவைபட்டால் போராட்டம் நடத்தவும் தயாராகி வந்த வேளையில்
நம் தொகுதி எம்பியான ஏ.கே.எஸ். விஜயன் அவர்களுக்கு ஏற்கனவே எழுத்து மூலம்
நகர திமுக வாயிலாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
நாகை தொகுதி எம்.பி-விஜயனுடன் அவர்களுடன் சந்திப்பு :
இருப்பினும்
எம்பி அவர்களை கடைசியாக நேரில் ஒரு தடவை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற
வற்புறுத்துவது எனவும், அப்படியும் நிறைவேற்றிதரா விட்டால் மாவட்ட, மாநில
ஆலோசனையோடு மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்
முதல் கட்டமாக இன்று 17.12.2012 காலை நமது நிர்வாகிகள் எம்பி அவர்களை
நேரில் சந்தித்து முத்துப்பேட்டையில் ரயில் ரிசர்வேசன் இல்லாததால் மக்கள்
படும் இன்னல்களை எடுத்து சொல்லி ஏற்கனவே கடிதம் கொடுத்ததையும்
நினைவுபடுத்தப்பட்து. அதற்க்கு பதில் அளித்த எம்பி அவர்கள் உங்கள்
கோரிக்கையை ஏற்று ஏற்கனவே எனக்குள்ள கோட்டாவில் ஒதுக்கீடு செய்துவிட்டேன்
கூடிய விரைவில் முத்துப்பேட்டை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம்
இயங்கும் என தெறிவித்தார். இதற்க்கு நன்றி தெறிவித்து விட்டு,
முத்துப்பேட்டை - திருவாரூர் நேரடி பஸ் இயக்க கோரிக்கை :
மேலும்
ஒரு கோரிக்கையாக, முத்துபேட்டையில் இருந்து நேரடியாக திருவாரூருக்கு
பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. உடனே நம்
எதிரிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசிவிட்டு இதையும் கூடிய
விரைவில் நிறைவேற்றிதருவதாக வாக்களித்தார் எம்பி.
மக்களின் எதிர்பார்ப்பு :
சொன்னபடி
நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் கடைசி செய்தி நாம் ரயில்வே
உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது எம்பி ஒதுக்கியது உண்மைதான் தபால்
அதிகாரிகள் தான் இங்கு இடம் போதாது என தெறிவித்ததாக கூறினார் இதை தொடர்ந்து
தபால் அதிகாரிகளை நேரில் சந்திக்க தவ்ஹித் ஜமாஅத் முயற்சித்து வருகிறது.
இன்ஷா அல்லாஹ்... முயற்சிகள் தொடரும்...
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்