அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது. தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தாங்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக சில சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர்.
தவறுதலாக கைது செய்யப்படும் சிறுபான்மையினரை உடனே விடுவிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.மேலும் அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
#வெறும் கடிதம் அனுப்புவதோடு நிறுத்தி விடாமல் இதை நாட்டில் அணைத்து மாநிலங்களிலும் கட்டாயமகா அமல் படுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அது மட்டும் அல்லாமல் இன்றுவரை கைது செய்யப் பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை உடனே விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.
அப்படி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப் படும் நபர்களை அவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபணம் ஆகும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கி அவர்களை அவர்கள் குடும்பத்தோடு வாழ அனுமதிக்க வேண்டும். அப்துல் நாசர் மதானி போன்ற சகோதரரர்கள் பல வருடங்களாக விசாரணை கைதியாகவே தங்கள் வாழ்க்கையை சிறைசாலையில் கழித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஜாமீன் வழங்க சொல்லி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக கடுமையாக உடல் நிலை பாதிக்கப் பட்ட பலர் சரியான மருத்துவ உதவியின்றி சிறைச்சாலையில் கஷ்டப் பட்டு வருகின்றரன் என்ற செய்தி பலமுறை வந்த பிறகும் அதை எந்த அரசும் கண்டுக்கொல்வதாக தெரியவில்லை.அவர்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும்
உண்மையாகவே அப்பாவிகள் தண்டிக்கப் படக் கூடாது என்பதில் மத்திய அரசு உண்மையாக இருந்தால் இது போன்ற சட்டங்களை மாநில அரசுகளை கட்டாயம் கடைப் பிடிக்க சொல்லி கட்டளை பிறப்பிக்க வேண்டும். இதை மீறும் காவல்துறையினர் மீதும் சட்டம் கடுமையாக பாய வேண்டும்.செய்யுமா மத்திய அரசு??
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்