அயோத்தி: நாளை வழங்கப்படுவதாக இருந்த பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி.
நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு இன்று வேறு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் ஆளுக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.
Home »
சமுதாய செய்திகள்
,
பாபர் மஸ்ஜித்
» 28 ம் தேதி வரை பாபர் மஸ்ஜித் வழக்கை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
28 ம் தேதி வரை பாபர் மஸ்ஜித் வழக்கை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
Labels:
சமுதாய செய்திகள்,
பாபர் மஸ்ஜித்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்