தஞ்சை தெற்கு மாவட்டம் புதுபட்டினத்தில் கடந்த 22 .09 .2009 அன்று இந்து முன்னணி கயவர்கள் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு சேது பாவ சத்திரம் காவல் துறை ஆய்வாளரும் உறுதுணையாக செயல்பட்டார்.இதனை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைஇன் கீழ் முஸ்லிம்களின் மாபெரும் காவல் நிலையம் முற்றுகை ஆர்பாட்டம் (30 .09 .2011) இன்று மாலை 4 :30 மணியளவில் சேது பாவ சத்திரத்தில் நடைபெற்றது .இதில் ஆயிரகணக்கான முஸ்லிம் ஆண்கள்,பெண்கள் கலந்தது கொண்டு ஆர். எஸ்.எஸ் மற்றும் காவல் துறை ஆய்வாளருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சஹோதரர் பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.இதில் பேசிய சஹோதரர் அல்தாபி அவர்கள் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய காவி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் மற்றும் தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சேது பாவா சத்திரம் காவல் துறை ஆய்வாளரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் செய்யவிட்டால் தமிழகம் குலுங்கும் அளவிற்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்றும் அவர் குறிபிட்டார்.

0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்