
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 18 -12 -2011 ஞாயிற்றுக்கிழமை முத்துபேட்டை கிளை 1 மற்றும் கிளை 2 களின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 .30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்தின் துவக்க உரை முத்துபேட்டை கிளை 1 தலைவர் முஹமத் அலி ஜின்னாஹ் அவர்கள் நிகழ்த்தினர் , முத்துபேட்டை கிளை 1 செயலாளர் முஹம்மத் புஹாரி அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ஷேக் முரிது ஒரு பித்தலாட்டம் என்னும் தலைப்பில் ஷேக் முரிது கூட்டதினரக்கு தனது பேச்சின் மூலம் நல்ல சாட்டையடி கொடுத்தார் , மாநில செயலாளர் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் வரதச்சனை கொடுமை மற்றும் ஆடம்பர திருமணம் என்னும் தலைப்பில் வரதச்சனைய பற்றியும் , தவ்ஹீத் திருமணம் என்ற பேரில் நிகழும் ஆடம்பர திருமணத்தையும் தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிகொன்டு இது போன்ற திருமணத்தை நடத்தும் மற்றும் ஆதரிக்கும் கூட்டத்தினர் வெட்கி தலைகுனியும் படி தனது மார்க்க பேச்சின் மூலம் தோளிருது காட்டினார்கள் , மாவட்ட பேச்சாளர் சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் ஒற்றுமை என்னும் தலைப்பில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிகொள்ளும் கூட்டத்தினரை
பார்த்து எது ஒற்றுமை குரான் ஹதீஸ் தான் ஒற்றுமை என்று ஆதாரத்துடன் உரை நிகழ்த்தினார் இடையில் மாவட்ட தலைவர் தீர்மானங்கள் வாசித்தார் மற்றும் பிப்ரவரி 14 இட இதிகீடு அவசியம் ஏன் என்று சிறுது நேரம் மக்களுக்கு விளக்கினார்கள் . இறுதியாக முத்துபேட்டை கிளை 2 (ஆசாத்நகர் கிளை ) செயலாளர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை கூறி துவா ஓதி கூட்டம் முடிக்கப்பட்டது , இக்கூட்டத்திற்கு ஆயிரகணக்கான ஆண்களும் பெண்களும் வந்து சொற்பொழிவை கேட்டு பயான் அடைத்தனர் அல்கம்துளில்லாஹ் ...
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்