ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றுகைப் போராட்டம் என்றாலும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.








இதை கண்டித்து இன்று (14-6-2012) காலை சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனது குறிப்பிதக்கது.

நன்றி : www.tntj.net
Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template