
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முத்துப்பேட்டை கிளைகள்
இணைந்து நடத்திய இஸ்லா
மிய மார்க்க விளக்க பொதுக்
கூட்டம் சிறப்பாக நடைபெற்
-றது.மாநில பொது செயலாளர்
சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஏன் இதனை பிரிவுகள் என்னும்
தலைப்பில் குர்ஆன் ஹதிஸ் அடிபடையில் சொற்பொழிவு நிகழ்த்தினர்.மாவட்ட பேச்சாளர்
சகோதரர் அல்தாப் ஹுசேன் அவர்கள் ரமளானில் பெற்ற படிப்பினை என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ஆசிரியை ஜெசீரா ஆலிமா அவர்கள் தீமைகளை தடுப்பதில் பெண்களின் பங்கு என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் . இக்கூட்டத்திற்கு துவக்க உரை சகோதரர் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களும்( முத்துபேட்டை கிளை 1 தலைவர்) , தலைமை சகோதரர் புஹாரி அவர்களும் (முத்துபேட்டை கிளை 1 செயலாளர்), நன்றியுரை சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களும்( முத்துபேட்டை கிளை 2 செயலாளர்) நிகழ்த்தினர்.சகோதரர் நைனா முஹம்மது தீர்மானம் வாசித்தார் ... இக்கூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் திரளாது கலந்து கொண்டனர். இவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹுதஆல நற்கூலி வழங்குவானாக ...
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்