அஸ்ஸலாமு அழைக்கும் ,
கடந்த 30.08.2013 அன்று நடந்த ஜும்மாவுக்கு பின் நடந்த ஆலோசனைக்கு பின் சகோ பசூல் அவர்களிடம் பெண் வீட்டு திருமண விருந்தில் கலந்து கொண்ட விசயமாக நேரில் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன்னுடைய அம்மாவின் தங்கையின் வீட்டு திருமண விருந்தில் கலந்து கொண்டதாகவும், உணவு அதிகமா மிஞ்சியதாகவும் இவர் போய் எடுத்து விநியோகம் செய்ததாகவும்
விளக்கம் அளித்தார். இது தவறு தான் என்றும் இனிமேல் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தில் ஒரு போதும் ஈடு பட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அவருக்கும் இன்னும் மற்ற யாரும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்தவரையில் நிர்வாகியாக உள்ள ஒருவர் தவறு செய்தால் முதலில் நிர்வாக பொறுப்பில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவார், பிறகு விசாரணை நடைபெறும் ஆனால் உறுப்பினராக இருக்ககூடியவரை இது போன்ற சம்பவத்திற்காக நீக்குவது விதி அல்ல என்ற அடிப்படையில் அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது .
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முத்துபேட்டை கிளை 2
ஆசாத் நகர்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்