அடக்க நினைத்த ஆட்சியர்; அறல வைத்த தவ்ஹீத் ஜமாஅத்!! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » அடக்க நினைத்த ஆட்சியர்; அறல வைத்த தவ்ஹீத் ஜமாஅத்!!

அடக்க நினைத்த ஆட்சியர்; அறல வைத்த தவ்ஹீத் ஜமாஅத்!!

















முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கட்டப்பட்டு வந்த அலுவலகம் (மர்கஸ்) கட்ட தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமையின் அறிவுரை படி மாவட்டம் சார்பில் 5-11-2013 இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் பல கருத்துக்கள் இணையதளங்கள், சமூகவலைதளங்களில் பரவியது. சிலரின் இந்த எதிர்ப்புகள் இந்த ஆர்ப்பாட்டம் எதற்கு என்று பொது மக்களையும் சிந்திக்க வைத்தது. 

பல பகுதிகளிலிருந்தும் மக்கள்:

திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல்,வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். தஞ்சை-நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த மக்களும் இந்த ஆட்சியரை கண்டிக்க ஆர்ப்பரித்தனர்.

வழிமறித்த காவல்துறை அராஜகம்: 

ஆட்சியரின் அறிவுரை படி செயல்பட்ட காவல்துறையினர், காலை முதல் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரையும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். இதில் குறிப்பாக திருவாரூர், நன்னீலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், எடையூர் போன்ற பல பகுதிகளில் தடைசெய்தது காவல்துறை.

காவல்துறை மற்றும் ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்:

தடை செய்த காவல்துறையை கண்டித்து கொட்டும் மழையிலும், அந்த அந்த பகுதியிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்டம் அறிவுருத்தியதை தொடர்ந்து, திருவாரூர், கூத்தாநல்லூர், நன்னீலம், எடையூர் காவல்நிலையம், திருத்துறைப்பூண்டி என பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

சிறையை பிரச்சார மேடையாக்கிய TNTJ!!:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்தனர். பின்னர் அந்த மண்டபங்களில் மாவட்ட பேச்சாளர்களை கொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவு ஏற்ப்பாடுகளை கிளைகளே செய்திருந்தனர். 

அடக்க நினைத்த ஆட்சியரின் அராஜகமும், பரிதாபமும் :

ஏன் இவர்களை சீண்டி பாரத்தோம் என்று நினைக்கும் அளவிற்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நிலைகுலைய வைத்து விட்டது தவ்ஹீத் ஜமாஅத். (அல்லாஹ் அக்பர்..) தவ்ஹீத் ஜாமத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சியவர்கள் கிடையாது என்பதை பலமுறை காண்பித்தும், அடக்குமுறை செய்யும் ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம்.

நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு: 

தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை கட்ட தடைவிதித்த ஆட்சியர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட எங்களது அலுவலக இடத்தை தொடர்ந்து கட்ட அனுமதியளித்து உத்தரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் இதை விட மிகபெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்.

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template