இது பள்ளிவாசலா அலுவலகமா? - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » இது பள்ளிவாசலா அலுவலகமா?

இது பள்ளிவாசலா அலுவலகமா?



















அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள சகோதரர்களே தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத்தின் முத்துப்பேட்டை கிளையில் கட்டப்பட்டு வந்த மர்கசை அநியாயமான முறையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தினார்

இதை எதிர்த்து தவ்ஹித்ஜமாத் இன்று 05.11.2013 மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது அல்லாஹ்வின் உதவியால் வெற்றியும் பெற்றது

இந்த ஆர்பாட்டம் சம்மந்தமான வேலைகள் ஆலோசனைகள் என இருந்த போது ஒரு சில சகோதரர்கள் ஏதோ அறிவிப்போர்வமாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு சில கேள்விகளை நம்மிடம் கேட்டார்கள் அவர்கள் உன்மையான பெயரில் கேள்வி கேட்காததால் அதை நாம் அலட்சியபடுத்தினோம்

சில சகோதரர்கள் அவர்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கொடுத்தால் அல்லாஹ்நாடினால் அவர்களும் உன்மையை உனர்ந்து திருந்த வாய்ப்பாக இருக்குமே என சொன்னார்கள்

நாம் எப்போதுமே முகவரி இல்லாத போலியாக உள்ளவர்களுக்கு பதில் கொடுப்பது கிடையாது அப்படி பதில் கொடுப்பவர்களையும் நாம் கண்டித்துவருகிறோம். 


முகவரியோடு சில சகோதரர்கள் அதே கேள்வியை கேட்டதால் இந்த பதிலைகொடுக்கிறோம் இந்த பதிலிலும் திருப்தி இல்லாவிட்டால் சொந்த பெயரில் அறிமுகமாகி கொண்டு கேட்டால் கூடுதலாக விளக்கம் தரவும் தயாராக இருக்கிறோம்

1. இது பள்ளிவாசலா அலுவலகமா?

பள்ளிவாசல் என்றால் என்ன நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கமாட்டார்கள்.

நடைமுரையில் பள்ளிவாசல் என்றால் தொழுகை நேரத்தில் பாங்கு சொல்வது தொழுகை முடிந்ததும் இழுத்து பூட்டிவிட்டு வீட்டுக்குபோவது அல்லது தொழுக வராதவர்கள் அங்கு அமர்ந்து வெட்டிகதை பேசுவது அல்லது தூங்குவது கல்யான காலத்தில் விருந்துவைக்க வாடகைக்கு விடுவது இதுதான் நடைமுறையில் பள்ளிவாசலாக பார்க்க படுகிரது

ஆனால் தவ்ஹித்ஜமாத் மர்கஷ் என்ற பெயரில் கட்டப்படும் கட்டிடத்தில் மருத்துவமுகாம்,ரத்ததானமுகாம்,கல்விவழிகாட்டி, பேச்சாளர் பயிற்ச்சி குடும்ப பஞ்சாயத்து, அனாதை இல்லம் உதவி, முதியோர் இல்லம் உதவி சம்மந்தமான ஆலோசனை அனைத்தும் நடக்கும்தொழுகை நேரம் வந்துவிட்டால் பாக்கு சொல்லப்பட்டு தொழுகை நடக்கும், அதை தொடர்ந்து திருகுரான் தர்ஜிமா, ஹதீஸ்விளக்க வகுப்பு இப்படி நபிகள் நாயகம் செய்ய சொன்ன அத்தனை வேலைகளையும் செய்யும் இடம்தான் தவ்ஹித்ஜமாத் மர்கஷ்.

இதை நீங்கள் பள்ளிவாசல் என்று எடுத்துகொண்டாலும் சரி, அலுவலகம் என எடுத்துகொண்டாலும் சரி, பெயர்தான் மாறும் பனி ஒன்றுதான் அது அல்லாஹ்வும் அவன் துதரும் காட்டிதந்தவழியில் நடக்கும்

2.அலுவலகம் என பொய் சொல்லி அரசாங்கத்தை தவ்ஹித்ஜமாத் ஏமாற்றலாமா?

நாம் ஏமாற்றவில்லை இன்றும் சொல்கிறோம் மேலே சொன்ன அலுவல்களை நாம் அங்குவைத்து பார்ப்பதால் தமிழில் அதற்க்கு பெயர் அலுவலகம்.தொழுகை வக்து வந்ததும் தொழுகை நடப்பதால் நடைமுறையில் அது பள்ளிவாசல்.

காலையில் 9மனிக்கு திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு மாலை 5 மனிக்கு வேலை முடிந்ததும் இழுத்து பூட்டிவிட்டு செல்லும் இந்த உலகதேவைக்கான அலுவலகம் என மக்கள் புறிந்துகொள்ள வேண்டும் என திட்டமிட்டு அலுவலகம் என பரப்பினார்கள் மக்கள் தெளிவாக புறிந்துகொண்டதால்தான் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திரண்டுவந்தனர்.

இது இந்த உலக தேவையை பூர்த்தி செய்வதற்க்கான வியாபார அலுவலகம் அல்ல மறுமையில் வெற்றிபெற நபிகள் நாயகம் மதினாவில் உறுவாக்கிய மஸ்ஜித்நபவி போன்றது என்பதை தெளிவாக புறிந்துகொண்டால் எந்த குழப்பமும்வராது

குறிப்பு--
இன்று நடந்த ஆர்பாட்டத்திற்க்கு பின்பு நம்மை பேச அழைத்த சப்-கலக்டரே நாம் மேலே சொன்ன அலுவலம் என்றால் என்ன என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template