Home »
» ஏகத்துவத்தை எதிர்த்த சுன்னத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.காவினர்
ஏகத்துவத்தை எதிர்த்த சுன்னத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.காவினர்
திருவாரூர் மாவட்டம் நாச்சிகுலத்தை சார்ந்தவர் அசரப் அலி. இவரது திருமணம் கடந்த 4.4.2010 அன்று தவ்ஹீத் அடிபடையில் நடத்தி வைக்குமாறு ஊர் ஜமாத்திடம் கேட்டுகொண்டார்.இதற்கு ஜமாத்தினர் தவ்ஹீத் அடிபடையில் திருமணம் நடத்தி வைக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்வது போல்
1.தவ்ஹீத் ஜமாத்தினர் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு செல்லக்கூடாது.
2.எங்கள் பள்ளி வாசலுக்கு மட்டும் தான் தொழுகைக்கு வரவேண்டும்.
3.தவ்ஹீத் ஜமாத்தினர் பள்ளி வாசலுக்கு பணம் கொடுக்க கூடாது.
4.எங்கள் பள்ளி வாசலுக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும்.
என்று
எழுதி கையெழுத்திட்டு தரவேண்டும் என்று ஊர் ஜமாத்தினர் கூறினர். இதை மறுத்த அசரப் அலி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் சென்று நடந்ததை விளக்கி,தவ்ஹீத் ஜமாஅத் தான் என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.தவ்ஹீத் ஜமாத்தினர் நடத்தி விபத்தாக உறுதியளித்தது.இதை அடுத்து கடந்த 4.4.2010 தேதி அன்று தவ்ஹீத் ஜமாத்தினர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.திருமணம் முடிந்து மதியம் விருந்துக்காக
மக்களை வீட்டில் இருந்தது மண்டபத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்த கார் ஒன்றை த.மு.மு.காவை சேர்ந்த பைரோஸ் என்பவன் கல்லை எடுத்து உடைத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைக்கும் திருமணதிற்கு போகுபவர்களுக்கு இது போன்று கதி தான் என்று கூறி வீட்டு சென்றான்.உடனே கார் உரிமையாளர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் சென்று செய்தியை கூறினார்.தவ்ஹீத் ஜமாத்தினர் அவரை அழைத்து கொண்டு முத்துபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.இதையடுத்து த.மு.மு.காவை சார்ந்த யாசர் என்பவன் மண்டபத்திற்கு வந்து சப்தமிட்டு தள்ளு முள்ளில் ஈடுபட்டான்.அடுத்ததாக த.மு.மு.க மாவட்ட பொறுப்பில் இருக்கும் தாஜுதீன் என்பவர் மோட்டார் பைக்கில் மண்டபத்திற்கு வந்து கொச்ச வார்த்தைகளால் தவ்ஹீத் ஜமாஅதினரை ஏசினார்.திடீர் என்று மண்டபத்திற்கு 20 பேர் கொண்ட கும்பல் கையில் கட்டையுடன் ஓடி வந்து மண்டபத்தில் இருந்தவர்களை (பெண்களையும்) சரமாரியாக தாக்கியது.இதில் தவ்ஹீத் ஜாமத்தை சார்ந்த சிராஜுதீன்,ஷேக் ஜாசிம்,சித்திக் மூவரும் காயமடைந்தனர்.
தவ்ஹீத் ஜமாத்தினர் கொடுத்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமாதானம் படுத்தினர்.
த.மு.மு.க மாவட்ட பொருப்பாளரான தாஜுதீன் தலைமையில் த.மு.மு.காவினர் ரோட்டிற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பிறகு காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
மண்டபத்தில் நின்று கொண்டிருந்த தவ்ஹீத் ஜாமதினர் சிராஜுதீன்,ஷேக் ஜாஸிம்,ரெஜிஸ் கான்,சித்திக் ஆகிய நான்கு நபர்களையும் முதல் உதவி செய்ய திருத்துறைபூண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி முத்துபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று த.மு.மு.காவினர் புகார் அளித்துள்ளனர் என்று கூறி திருட்டு கேஸ் FIR பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.இதை அறிந்த தவ்ஹீத் ஜமாத்தினர் காவல்துரைடம் சென்று அவர்கள் மேல் போட்டிருக்கும் பொய் கேசை நீக்கவிட்டால் SP ஆபிஸ் முற்றுகை இட போவதாக கூறினார்.பிறகு காவல் துறையினர் தவ்ஹீத் ஜமாத்தினர் மீது போடபட்டிருந்த பொய்
கேசை நீக்கிவிட்டனர்.கடந்த 8.4.2010 அன்று தவ்ஹீத் ஜமாத்தினர் திருச்சி மத்திய சிறைக்கு சென்று 4 நபர்களையும் அழைத்து வந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்........
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்