தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர்) யின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அர் ரஹ்மத் பெண்கள் மதரசா மார்க்க அறிவு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி 18 -03 -2012 ஞாயற்றுக்கிழமை 5 .30 மணிக்கு நடைபெற்றது ,
கிளை துணை தலைவர் நிஜம் அலி அவைகள் தலைமை தாங்கினார் மாவட்ட துணை செயலர் ஷேக் அலாவுதீன் அவர்கள் முன்னிலையின் நடைபெற்றது .
மாவட்ட பேச்சாளர் சகோதரர் அல்தாப் உசேன் அவர்கள் பெண்கள் அன்றும் இன்றும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அற ரஹ்மத் பெண்கள் மதரசா ஆசிரியை சகோதரி ஜஸீரா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்னும் தலைப்பிலும் , சகோதரி ரஜப் ஏகத்துவம் என்னும் தலைப்பிலும் , சகோதரி சுமையா ஆகியோர் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர் , பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு , மார்க்க அறிவு போட்டியில் முதல் 5 இடம் வந்தவர்களுக்கு தங்க நகைகள் மற்றும் 73 நபர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது அல்கம்துலில்லாஹ், இந்நிகழ்ச்சியிக்கு ஆண்களும பெண்களும் கலந்து பயன் அடைந்தனர்