முத்துப்பேட்டை அர்-ரஹ்மத் தவ்ஹீத்
பெண்கள் மதரஸாவில் 25-11-2012 அன்று மாநில துணைத்தலைவர் M.I.சுலைமான் வருகை
தந்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள்
உடனிருந்தனர். அதில் எடுக்கப்படும் பாடத்திட்டம், சட்டத்திட்டம்,
நிர்வாகமுறை, மாணவிகளின் கல்வித்திறன் ஆகியவைகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு
இன்னும் சிறந்த முறையில் இந்த மதரசாவை கொண்டு செல்ல ஆலோசனைகளையும்
சட்டத்திட்டங்களையும் எடுத்துகூறி முதற்கட்டமாக இரண்டு கணினிகள் வாங்கி
கொடுக்குமாறும் அதனால் ஏற்படும் பயன்களையும் நிர்வாகிகளிடம்
எடுத்துரைத்தார். இந்த ஆய்வு மிகவும் பயனாக இருந்ததாகவும் இன்னும் போதிய
பொருளாதார வசதி குறைவு காரணமாகத்தான் சில வசதிகளை செய்து கொடுக்க
முடியவில்ல என்றும், நமது சகோதரர்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம்
என்றும் பதிலுரைத்தனர்.



இந்த
செய்தியின் மூலமாக நமது சகோதரர்களுக்கு மதரசா நிர்வாகிகள் வைக்கும்
கோரிக்கை என்னவென்றல், முதல்வருடத்தில் 9 ஆலிமாக்களை உருவாக்கி இந்த வருடம்
14 மாணவிகள் பயின்று வருவதாகவும் உள்ளூரில் உள்ள சகோதரர்கள் மூலமாக உதவி
மேற்கொண்டு இந்த மதரசாவை நடத்தி வருவதாகவும். மேலும் இதன் வளர்ச்சிக்காக
ஹதீஸ் கிதாபுகள், மற்றும் கணினிகள், மேலும் அவர்கள் தொழிற் பயிற்சி செய்ய
தையல் மிஷின் போன்ற சாதனங்கள் தேவைப்படுகின்றது உதவி செய்ய ஆர்வமுள்ள
சகோதரர்கள் கிளை 2 நிர்வாகிகளை தொடர்புக்கொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்