முத்துப்பேட்டையில் நபிவழிப்படி மையத்தை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலி முஸ்லிம்கள்:
முத்துப்பேட்டை கிளை 1 தலைவராக இருக்கும்
சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்களுடைய மகன் வீட்டு ஒன்றரை வயது பேரன் இருதய
கோளாறால் நேற்று அறுவை சிகிச்சை பலனின்றி சென்னையில் மௌத்தாகிவிட்டது.
இன்று காலை முத்துப்பேட்டை கொண்டுவரப்பட்டது. அதை அடக்கம் செய்ய அரபுசாஹிப்
பள்ளி முகல்லாவை தொடர்புக்கொண்டபோது மையத்து தொழுகை இந்த பள்ளி ஆலிம் தான்
வைக்கவேண்டும் குடும்பத்தினர் யாரும் தொழுகை வைக்ககூடாது என்று
கூறிவிட்டனர். முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளியிலும் மையத்துக்கு
உடமையாணவர்கள் தொழ வைக்க அனுமதி இருக்கும்போது நீங்கள் மட்டும் ஏன்
அனுமதிக்கமாட்டீர்கள் என கேட்டதற்கு அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த
முகல்லாவில் நாங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்று கூறிவிட்டனர்.
இதுபோல் முன்பு ஒருதடவையும் நடந்துக்கொண்டனர். ஆனால் இந்த தடவை
இவர்களிடம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் நாம் வீட்டிலேயே தொழுகை
நடத்தி வந்து அடக்கம் செய்துவிடலாம் என்று முடிவு செய்து, வீட்டிலேயே
மையத்த்து தொழுகை தொழுதுவிட்டு மையவாடியில் சென்று அடக்கம்
செய்துக்கொண்டிருக்கும்போது ஜமாஅத் தலைவர் மையவாடியின் கேட்டை இழுத்து
மூடினார் அப்பொழுதஉள்ளே இருந்த சகோதரர்கள் செல் போனில் போட்டோ எடுக்க
முயன்றபோது உள்ளே இருந்தவர்களை தரக்குறைவாக திட்டிவிட்டு கேட்டை
திறந்துவிட்டு, அருகில் உள்ளவரிடம் பள்ளிவாசல் மைக் போட்டு ஊரை திரட்டுடா
இவங்களை ஒரு கை பார்பபோம் என்றதும் பள்ளிவாசல் மைக் போட்டு ஊரை
திரட்டப்பட்டது.
மையத்தை அடக்கம் செய்துவிட்டு சகோ.
அன்சாரி அவர்கள் நாம் நம்முடைய இறைதூதர் காட்டிய வழிப்படி அடக்கம்
செய்துவிட்டோம். வெளியில் தாக்க நின்று கொண்டிருப்பவர்கள் நம்மை
தாக்கினால் கூட அல்லாஹ்வுக்காஹ பொறுத்துக்கொண்டு சட்டப்படி என்ன நடவடிக்கை
எடுத்துக்கொள்வோம் என்று சொல்லி வெளியேறிய பொழுது வெளியில் திரண்டு நின்ற
கூட்டம் தகாத வார்த்தைகளாலும் திட்டி தக்க வந்தனர் அனால் நாங்கள் உங்களிடம்
சண்டையிட வரவில்லை என்று கூறிவிட்டு அந்த பகுதியை விட்டு வெளியேறும்போது
பின்னால் வந்து ஆசாத்நகர் அப்துல் அஜீஸ் அவர்களையும் அவரது மகனையும் பின்
பக்கமாக தாக்கினர். உடனே சுகாதரித்துக்கொண்ட அனைவரும் விரைவாக வெளியேறி
காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்துக்கொள்வோம் என்று வெளியேறிவிட்டனர்.
இன்னும் தகவல்கள் அடுத்த பதிப்பில் இன்ஷா அல்லாஹ்…
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்